இலங்கை

நாடு அமைதியும் செழிப்பும் மிக்கதாக மாற வேண்டும்

பன்முகத்தன்மை கொண்ட எமது சமூகத்தில், சுயநலமற்ற சேவை, கருணை மற்றும் ஒற்றுமையின் மூலம் சவால்களை முறியடிக்க முடியும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். 

இருளை நீக்கி ஒளியையும், அறியாமையை நீக்கி ஞானத்தை வழங்கும் ஒரு புனித நாளாக மகா சிவராத்திரி போற்றப்படுகிறது. 

இது ஆன்மீக ஒழுக்கம், தியானம் மற்றும் மன அமைதிக்கான ஒரு உன்னத தருணமாகும். 

பன்முகத்தன்மை கொண்ட எமது சமூகத்தில், சுயநலமற்ற சேவை, கருணை மற்றும் ஒற்றுமையின் மூலம் சவால்களை முறியடிக்க முடியும் என்பதை இவ்விழா நமக்கு நினைவூட்டுகிறது. 

பக்தர்கள் இந்த இரவை பிரார்த்தனையிலும் தியானத்திலும் கழிக்கும் வேளையில், நமது நாடு அமைதியும் செழிப்பும் மிக்கதாக மாற அந்த இறைவனைப் பிரார்த்திப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். 

சிவபெருமானின் அருளால் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் அமைதியும், ஆரோக்கியமும், ஆன்மீக ஞானமும் பெருகட்டும். 

இலங்கை வாழ் மற்றும் உலகெங்கிலும் வாழும் இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் தமது இனிய மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…