இலங்கை

நடாஷா விவகாரத்தில் மன்னிப்புக் கடிதம் சமர்ப்பிப்பு!

பௌத்த மதத்தை அவமதித்ததாகக் கூறி, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் கீழ் நகைச்சுவைக் கலைஞர் நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டமை தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின்  கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி இன்று (19) உயர்நீதிமன்றில் கவலை வெளியிட்டார்.


இந்த வருத்தம் தெரிவிக்கும் வகையிலான கடிதமொன்றையும் அரச சட்டவாதி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.


இதற்கு மேலதிகமாக, இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்யும் போது இடம்பெறக்கூடிய சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுப்பதற்காகப் பின்பற்ற வேண்டிய ஆலோசனைகளை உள்ளடக்கிய வழிகாட்டல் கோவையொன்றை வெளியிடப் பொலிஸ் மா அதிபர் தீர்மானித்துள்ளதாகவும் அரச சட்டவாதி தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து, குறித்த மனு மீதான விசாரணையை நிறைவு செய்வதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…