இலங்கை

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை பெண் ஒருவர் படுகாயம்

இஸ்ரேலின் பீயேர்ஷெபா குடியிருப்புப் பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏவுகணை பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமால் பண்டார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பீயேர்ஷெபா பகுதிக்கு ஈரான் ஏவிய ஏவுகணையை இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஏவுகணையின் பாகங்கள் குறித்த இலங்கை பெண் பணிபுரிந்த வீட்டின் மீது விழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காயமடைந்த பெண் சொரோகா வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு லேசான காயங்களே ஏற்பட்டிருந்ததால், வைத்திய ஆலோசனையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக தூதுவர் தெரிவித்தார்.

அவரது நிலைமை கவலைக்கிடமானதாக இல்லை என்றும், காயமடைந்த இலங்கை பெண் அந்த வீட்டில் பராமரிப்பாளராக பணிபுரிந்து வந்ததாக இலங்கை தூதுவர் நிமால் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…