No products in the cart.
கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் பாணந்துறை வடக்கு, ஞானசேன மாவத்தையில் வசித்து வந்த 37 வயதுடைய ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
இந்தப் படுகொலை எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனிடையே, ஒரு தொகுதி குஷ் ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவரை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து ஒரு கிலோ 154 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் வேயங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
















