இலங்கை

எதிர்வரும் வாரங்கள் தீர்மானமிக்கவை – அருண ஜயசேகர

மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, இலங்கைக்கு அடுத்த சில வாரங்கள் மிகவும் தீர்மானமிக்க காலப்பகுதியாக அமையக்கூடும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுப் பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார். 

இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர், இதனால் எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் சில தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார். 

தற்போதைய போர்ச் சூழலால் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையே இந்தத் தாமதத்திற்குப் பிரதான காரணம் என அவர் சுட்டிக்காட்டினார். 

இதற்கமைய, நாட்டின் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக, நாட்டில் விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலையை மேலும் நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…