இலங்கை

போதைப்பொருட்களுடன் சென்ற 08 பேர் கைது!

போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுசாக்கலை சோதனைச் சாவடியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவனொளிபாதமலை தரிசனத்திற்காக நேற்றும் இன்றும் வெளி மாவட்டங்களிலிருந்து பெருமளவிலான பக்தர்கள் வாகனங்கள் ஊடாக வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதன்காரணமாக அந்தப் பகுதியில் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று (13) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மூவரும், இன்று (14) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஐவருமாக மொத்தம் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள், கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த ‘மதன மோதக’ உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் எம்பிலிபிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…