இலங்கை

எரிபொருளை பதுக்கிய மேலும் மூவர் கைது

சட்டவிரோதமான முறையில் எரிபொருளை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை மற்றும் போக்குவரத்து செய்தமை தொடர்பில் மூன்று வெவ்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (20) மாலை ஹங்வெல்ல, களுத்துறை வடக்கு மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எமுல்கம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அனுமதிப்பத்திரமின்றி 645 லீற்றர் டீசலை வைத்திருந்த 31 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவின் போசிரிபுர பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில், அனுமதிப்பத்திரமின்றி 35 லீற்றர் 500 மில்லி லீற்றர் பெட்ரோலை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் புளுமெண்டல் பகுதியில் லொறி ஒன்றின் மூலம் அனுமதிப்பத்திரமின்றி 2000 லீற்றர் (10 பீப்பாய்கள்) டீசலைக் கடத்திச் சென்ற 25 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்தந்த பொலிஸ் நிலையங்கள் மேற்கொண்டு வருகின்றன.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…