கனடா

ஏர் கனடா விமான விபத்தில் விமானிகள் இருவர் பலி; பலர் படுகாயம்

 நியூயோர்க் நகரில் ஏர் கனடா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், விமானிகள் இருவரும் உயிரிழந்ததுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவின் மொன்றியலில் இருந்து இன்று அதிகாலை நியூயோர்க்கில் உள்ள LaGuardia (லாகார்டியா) விமான நிலையத்தை வந்தடைந்த ஏர் கனடா விமானமே விபத்தில் சிக்கியுள்ளது.

விமானம் ஓடுபாதையில் தரையிறங்கிய போது, எதிர்பாராத விதமாக குறுக்கே வந்த ட்ரக் (Truck) ரக வாகனம் ஒன்றுடன் பலமாக மோதியுள்ளது.

இந்தக் கோர விபத்தில் விமானத்தின் தலைமை விமானி மற்றும் துணை விமானி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் விமானத்தில் பயணித்த பல பயணிகள் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விமானம் தரையிறங்கும் வேளையில் ஓடுபாதையில் ட்ரக் ரக வாகனம் எவ்வாறு குறுக்கே வந்தது என்பது குறித்து விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…