No products in the cart.
வௌிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 1300 வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 37 வயதுடைய சீனப் பிரஜை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிடைத்த தகவலுக்கு அமைய, கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.














