இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு – அரசாங்கத்தின் நிவாரணம்!

அஸ்வெசும பயனாளர்களுக்கான 17,500 ரூபா கொடுப்பனவு 25,000 ருபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத்தை திட்டத்தை நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.

இதன்படி, அஸ்வெசும கொடுப்பனவு 17,500 ரூபாவிலிருந்து 25,000 ரூபா வரையும், 10,000 ரூபா கொடுப்பனவு 15,000 ரூபா
வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 5000 ரூபாய் கொடுப்பனவு 7500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக இந்த மாதத்தில் மேலதிகமாக 8,500 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

குறித்த கொடுப்பனவு ஏப்ரல் மாதம் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…