இந்தியாவிளையாட்டு

கிரிக்கெட் தகராறில் நடுவரின் தம்பி குத்திக்கொலை!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 2 உள்ளூர் அணிகளுக்கு இடையே கடந்த 06 ஆம் திகதி கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியின் இடையே ஒரு ஓட்டங்கள் தொடர்பாக இரு அணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை போட்டியின் நடுவராக இருந்த சிரஞ்சீவி தலையிட்டு தீர்த்து வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

பின்னர் அன்று மாலை அதே விவகாரம் தொடர்பாக சில வாலிபர்கள் இடையே மீண்டும் விவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. அப்போது கே.கிஷோர் (வயது 26) என்ற வாலிபர், போட்டி நடுவரின் சகோதரரான அஜித் (23) என்பவரை தாக்கி அவரது நெஞ்சில் கத்தியால் குத்தினார். 

இதில் படுகாயம் அடைந்த அஜித் உடனடியாக அருகில் இருந்த வைத்தியசாலைக்கு கொண்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விளையாட்டின் இடையே நடந்த சாதாரண பிரச்சனை வாலிபரின் உயிரைப் பறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. 

பொலிஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து புகைப்பட கலைஞரான கிஷோரை தேடி வருகிறார்கள்.

What's your reaction?

Related Posts

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின்…