இலங்கை

கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் நோர்வூட் – கெசல்கமுவ ஆற்றில், அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


நோர்வூட் – பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள நோர்வூட் பாலத்திற்குக் கீழே ஆற்றில் சடலமொன்று மிதப்பதாகப் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் பேரில் இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.


உயிரிழந்தவர் யார் என்பது குறித்த அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஹட்டன் பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளின் உதவியுடன் இது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…