இலங்கை

பத்தரமுல்லை பகுதியில் பாரிய வாகன நெரிசல்

ஐக்கிய மக்கள் சக்தி மக்கள் சக்தி தற்போது முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

பத்தரமுல்ல தியத உயனவிற்கு அருகில் பாராளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். 

இதன்காரணமாக பொல்துவ சந்திப்பகுதியில் இருந்து பாராளுமன்றம் செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…