இலங்கை

எரிவாயு விலை உயர்வு: 1.6 மில்லியன் மாணவர்கள் பாதிப்பு அபாயம்

சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் போஷணை உணவு வேலைத்திட்டமும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,

1.6 மில்லியன் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் தற்போது சுமார் 7000 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு மாணவருக்கான மதிய உணவை வழங்குவதற்காக 110 ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தாலும் எரிவாயு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வினால் மாணவர்களுக்கு சத்தான உணவை வழங்குவதற்கு அந்தத் தொகை தற்போது போதுமானதாக இல்லை என வழங்குனர்கள் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…