உலகம்

ஆப்கானிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்த பாகிஸ்தான் நடவடிக்கை

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்த பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, கடந்த ஒரு மாதத்தில் 19,500 ஆப்கானிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்த பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக வசிக்கும் சுமார் 80,000 ஆப்கானியர்கள் ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தான் அதிகாரிகள் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இருப்பினும், ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் ஆட்சி இது தொடர்பாக பாகிஸ்தான் அரசாங்கத்திடம் கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது.

What's your reaction?

Related Posts

சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம் டிரம்பின் அதிரடி திட்டம்

அமெரிக்க துறைமுகங்களில் சீன கப்பல்களை நிறுத்த, கட்டணம் விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருகின்றன. சீன பொருட்களுக்கு இதுவரை இருந்த 145 % வரியை 245 % ஆக…