இலங்கை

யாழ். கீரிமலை கடலில் நண்பர்களுடன் நீராடச் சென்றவருக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம்  – கீரிமலை கடலில் நீந்திக் கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (20.04.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை –  கட்டுவன் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி சந்துரு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், சிறிது நேரத்தில் அவரது சடலம் கரையொதுங்கியுள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

அத்துடன், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…