No products in the cart.
திடீர் மரம் விழுந்து விபத்து: ஒருவரின் உயிரை பறித்த சம்பவம்
இயங்கிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (22) இரவு எம்பிலிபிட்டிய, மஹாவலி நிலநிவச வீதிப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் மீது மரம் முறிந்து விழுந்ததில் அதன் ஓட்டுநரும் பின்னால் அமர்ந்து பயணித்த பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் முன்னரே ஓட்டுநர் உயிரிழந்திருந்ததுடன், காயமடைந்த பெண் அதே வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றார்.
உயிரிழந்தவர் பல்லேகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.














