இலங்கை

அரச நிதி நிர்வாகம் குறித்து குழுவில் முக்கிய கலந்துரையாடல்

அரசுத் திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி சைபர் தாக்குதல் ஊடாகக் காணாமல் போனமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக, நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கி ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோர் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அரசாங்க நிதி பற்றிய குழு முன்னிலையில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசாங்க நிதி பற்றிய குழு பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அண்மையில் திறைசேரி நிதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடி மற்றும் அதன் பாதுகாப்புத் தன்மைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளது

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…