இலங்கை

அதிகாலை விபத்து – இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – கோப்பாய் சந்திக்கும் பிரதேச செயலகத்திற்கும் இடையில் நேற்று (4) நள்ளிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். 

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீடு ஒன்றின் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த இளைஞர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 

சம்பவத்தில் கரவெட்டி வடக்கைச் சேர்ந்த 22, 24 வயதுடைய இருவரே உயிரிழந்தனர். 

இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…