இலங்கை

தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

வெள்ள நீரினால் மூழ்கியிருந்த தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன பரிமாற்ற நுழைவு வீதிகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 

நேற்று (13) குறித்த பரிமாற்றப் பகுதியில் உள்ள அளுத்கம – மத்துகம வீதி வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக, கொழும்பு நோக்கி நுழையும் வாயில், கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் வெளியேறும் வாயில் மற்றும் காலியிலிருந்து வரும் வாகனங்கள் வெளியேறும் வாயில் என்பன சொகுசு மற்றும் சிறிய ரக வாகனங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. 

தற்போது வெள்ள நீர் வடிந்துள்ள நிலையில், போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக வெலிபென்ன பரிமாற்ற நுழைவு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…