இலங்கை

மின்சார விநியோகத் தடை தொடர்பில் முக்கிய அறிவித்தல்


பொருளாதார நெருக்கடி இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை எனினும் வெசாக் மாதத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

வலுசக்தி நெருக்கடியால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கம் அதனை முகாமைத்துவம் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரச சேவையைச் சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் 6ஆவது கூட்டம்  பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன், மக்கள் மீது மேலதிக சுமை விழாதவாறு, வலுசக்தி தொடர்பான செலவுகளை அரசாங்கமே பொறுப்பேற்று ஒரு நிலையான முகாமைத்துவச் செயன்முறையை முன்னெடுத்துள்ளது.

எதிர்வரும் வெசாக் வாரத்தில் மக்களுக்குத் தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் பிரதமர் இதன் போது குறிப்பிட்டார்.

மேலும், அரசாங்கத்தின் முறையான திட்டமிடல் காரணமாகவே பாரிய மின்சார நெருக்கடியைத் தவிர்க்க முடிந்ததாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…