இலங்கை

தேசிய இராணுவ தின விசேட போக்குவரத்துத் திட்டம்


தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு இன்று (19) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் பாராளுமன்ற விளையாட்டரங்கில் உள்ள படை வீரர்கள் நினைவிடத்தில் நடைபெறவுள்ளது. 

இக்காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்துத் திட்டம் குறித்து பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். 

அதற்கமைய, இன்று மாலை 3.30 மணி முதல் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள் பொல்துவ சந்தியிலும், கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் கியஹேம் சந்தியிலும் கட்டுப்படுத்தப்பட்டு, பின்வரும் மாற்று வழிகளில் திருப்பி விடப்படும். 

மாற்று வழிகள்:- 

பாராளுமன்ற வீதியூடாக கொழும்பிலிருந்து வெளியேற வரும் வாகனங்கள் பொல்துவ சந்தியிலிருந்து பத்தரமுல்லை, பாலன்துன, கியன்னேம் சந்தி ஊடாக பயணிக்க முடியும். 

கியன்னேம் சந்தியிலிருந்து கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் பாலன்துன, பத்தரமுல்லை ஊடாக பயணிக்க முடியும். 

ரஜமல்வத்த பகுதியிலிருந்து போதிராஜ மாவத்தை ஊடாக வரும் வாகனங்கள் பத்தரமுல்லை வீதியை வந்தடைந்து, தேவையான வீதி வழியே பயணிக்க முடியும். 

பேருந்துகள் மற்றும் லொறிகளை நிறுத்துவதற்கான இடங்கள்:- 

ஜப்பான் நட்பு வீதி சந்தியிலிருந்து கிம்புலாவல சந்தி வரை. 

ஜப்பான் நட்பு வீதி மின்சார சபைக்கு அருகிலிருந்து பெலவத்த வரை.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…