இலங்கை

அரச வெசாக் தினத்தை முன்னிட்டு மூடப்பட வேண்டிய இடங்கள்

2026 ஆம் ஆண்டிற்கான அரச வெசாக் விழாவை முன்னிட்டு இறைச்சி விற்பனை நிலையங்கள், இறைச்சிக்காக விலங்குகளைக் கொல்லும் இடங்கள், பந்தய நிலையங்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று (27) முதல் ஜூன் மாதம் 02 ஆம் திகதி வரை வெசாக் வாரம் முழுவதும் குறித்த இடங்களை மூடுமாறு அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, மே மாதம் 30, 31 மற்றும் ஜூன் மாதம் 01 ஆகிய திகதிகளில் நாடு முழுவதும் இறைச்சிக்காக விலங்குகளைக் கொல்லும் இடங்கள் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்களை மூடுவதற்கும், பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி விற்பனையை நிறுத்துவதற்கும், பந்தய நிலையங்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளை மூடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…