இலங்கை

நயினாதீவு கடலில் தவறி வீழ்ந்து பாடசாலை அதிபர் பலி

நயினாதீவு கடலில் விழுந்து பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்தார். 

அதிபரும் மற்றுமொரு ஆசிரியரும், பயணிகள் படகினை தவறவிட்டமையால், கடற்தொழிலாளி ஒருவரின் சிறு படகில் நயினாதீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி பயணித்துள்ளனர். 

அதன்போது, சீரற்ற காலநிலையினால் அவர்கள் பயணித்த கடல் பகுதி கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில், படகு கடல் அலையில் சிக்கியுள்ளது. 

இதன்போது படகில் இருந்து அதிபர் நிலை தடுமாறி கடலில் விழுந்துள்ளார். 

அதனை அடுத்து , உடனடியாக செயற்பட்ட படகோட்டி அதிபரை மீட்க முற்பட்ட போதிலும், அவர் உயிரிழந்தார் 

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…