இலங்கை

கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவர் தாக்கி கொலை

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவர் தாக்கி கொ​லை செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இன்று (29) அதிகாலை உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

உயிரிழந்தவர் கொழும்பு – 15 ஹேனமுல்ல முகாம் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

தாக்குதல் காரணமாக ஏற்பட்ட காயத்தினால் அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 

தமது விட்டிற்கு அருகில் முச்சக்கரவண்டியை நிறுத்தி களியாட்டங்களில் ஈடுபட்ட சிலருடன் இடம்பெற்ற வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில் உயிரிழந்தவர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

அதன்பின்னர் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…