இலங்கை

சுகாதாரமற்ற தானசாலைகளை கண்டறியும் சுற்றிவளைப்புகள் தொடரும்

இம்முறை வெசாக் நிகழ்வை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்தப்படும் ‘தன்சல்’ வளாகங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்றை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) முன்னெடுத்துள்ளனர். 

இதற்கமைய, மே 29, 30 மற்றும் 31 ஆகிய மூன்று நாட்களுக்குள் மாத்திரம் நாடு முழுவதிலும் உள்ள 17,761 தானசாலைகள் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 

இந்தச் சோதனைகளின் போது, சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாமலும், பல்வேறு குறைபாடுகளுடனும் நடத்தப்பட்ட 148 தான சாலைகளை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். 

எவ்வாறாயினும், பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக அந்த தானசாலைகளை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. 

மாறாக, நிலவும் சுகாதாரக் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு அதன் அமைப்பாளர்களுக்கு கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. 

அதன்படி, குறைபாடுகள் சரிசெய்யப்பட்ட பின்னர் அவற்றை மீண்டும் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

வெசாக் வாரம் முழுவதும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தானசாலைகள், வெசாக் வலயங்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறவுள்ளதால், பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் மேற்கொள்ளப்படும் இந்த விசேட சோதனைகள் எதிர்வரும் நாட்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…