இலங்கை

நாகப்பட்டினம் செல்லவிருந்த 26 பயணிகள் தடுத்து நிறுத்தம்!

காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு கப்பல் மூலம் செல்லவிருந்த 26 பயணிகள் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். 

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்துவதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

நாகபட்டினம் – காங்கேசன்துறை இடையே இடம்பெறும் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவையில் இன்று (17) காலை நாகைபட்டினத்தில் இருந்து 117 பயணிகள் காங்கேசன்துறையை வந்தடைந்தனர். 

இவ்வாறு வந்த கப்பலில் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து 146 பயணிகள் நாகபட்டினம் நோக்கி பயணிக்க காத்திருந்தனர். 

இந்நிலையில் தங்கம் கடத்த முற்பட்டதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அவர்களில் 26 பயணிகள் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டனர். 

குறித்த 26 பேரையும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…