கனடா

கனடாவின் வான்கூவர் விமான நிலையத்தில் பரபரப்பு!

கனடாவின் வான்கூவர் சர்வதேச விமான நிலையத்தில், நேற்றைய தினம் விமானத்தில் ஏறும் நடைமுறைகளின் போது பயணி ஒருவர் ஏர் கனடா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வான்கூவரில் இருந்து பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிரின்ஸ் ஜார்ஜ் நகருக்கு காலை 8:25 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் கனடா எக்ஸ்பிரஸ் ‘விமானம் 8339’-ல் இச்சம்பவம் நடந்துள்ளது.

இதனால் அந்த விமானம் சுமார் 2.5 மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றது. விமான ஊழியர்கள் பலரை பயணி ஒருவர் தாக்கியதாக வந்த ஆரம்பகட்ட தகவலின் அடிப்படையில், கனடிய பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

What's your reaction?

Related Posts

கனடாவின் இராணுவத் தளத்தில் வெடிப்பு மற்றும் தீ விபத்து: பலர் உயிரிழப்பு!

கனடாவின் எட்மண்டனுக்குக் கிழக்கே அமைந்துள்ள கனடியப் படைகளின் வெயின்ரைட் தளத்தில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்து காரணமாக பல உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளதாகக் பெடரல் பாதுகாப்புத் துறை அமைச்சர் டேவிட் மெக்குயின்டி தெரிவித்துள்ளார்.…