இலங்கை

ஜனாதிபதி வியட்நாம் பயணம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

அதன்படி, எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதி வியட்நாமுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அத்தோடு, எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதியிலிருந்து 6 ஆம் திகதி வரை ஜனாதிபதி அநுர வியட்நாமில் தங்கியிருப்பார் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…