இலங்கை

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்குமா?

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து “முழு நாடும் ஒன்றாக”  தேசிய செயல்பாட்டு மையத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக இன்று (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, மரண தண்டனை தொடர்பான இந்த யோசனை குறித்து இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

“முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல்பாட்டு சபையில், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என சில தரப்பினரால் யோசனைகள் முன்வைக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அது குறித்து எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

“இப்பிரச்சினையின் தீவிரத்தன்மை குறித்து கலந்துரையாடும் போது சில தரப்பினரிடமிருந்து வந்த ஒரு யோசனையே இது. அதை எவ்வாறு செய்வது என்பது குறித்து இதுவரை இறுதி முடிவோ அல்லது உடன்பாடோ எட்டப்படவில்லை. பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் குறித்து பேசப்படும் போது பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படும் ஒரு யோசனை மட்டுமே இது.”

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…