இலங்கை

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு விழிப்புணர்வு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

இன்று (15) காலை 10.00 மணிக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல், நாளை (16) காலை 10.00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும். 

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள், களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட, புளத்சிங்ஹல, பேருவளை, இங்கிரிய, மத்துகம, பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பகுதிகள், அத்துடன் கேகாலை மாவட்டத்தின் வரகாப்பொல மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு இந்த அறிவித்தல் பொருந்தும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…