No products in the cart.
20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஜப்பானில் இன்று ஆரம்பம்!
20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஜப்பானின் ஐச்சி-நகோயா (Aichi-Nagoya) நகரங்களை மையமாகக் கொண்டு இன்று (19) ஆரம்பமாகியுள்ளது. இது அக்டோபர் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டு விழாவான இதன் இம்முறை கருப்பொருள் ‘Imagine One Asia’ என பெயரிடப்பட்டுள்ளது. ஆசிய ஒலிம்பிக் பேரவைக்கு உட்பட்ட 45 நாடுகளும் பிராந்தியங்களும், முதன்முறையாக இணையும் ஆசிய அகதிகள் குழுவும் அடங்கலாக மொத்தம் 46 அணிகள் இம்முறை போட்டிகளில் பங்கேற்கின்றன.















