No products in the cart.
அனோஜனுக்கான மரண தண்டனை தொடர்பில் அவசர இராஜதந்திர தலையீட்டை வலியுறுத்தும் அலி சப்ரி
சவுதி அரேபியாவில் பணிபுரிந்த போது கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகும் இலங்கை இளைஞரை விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் அவசர இராஜதந்திர தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தனது ‘X’ தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள அலி சப்ரி, குறித்த சம்பவம் தொடர்பாக அனோஜன் சிவராசா என்ற இளைஞருக்கு ஆரம்பத்தில் விதிக்கப்பட்டிருந்த 5 ஆண்டு சிறைத்தண்டனை, மரண தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளமை குறித்து தான் வருத்தமும் கவலையும் அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.














