இலங்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேருக்கு வகுப்புத் தடை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட நான்கு மூன்றாம் ஆண்டு மாணவர்கள் உட்பட, 11 சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவர் ஒருவரின் மரணத்திற்கு பகிடிவதை  காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இதேவேளை, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேலும் நான்கு மாணவர்கள் சமனலவெவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சரணடைந்த மாணவர்கள் விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…