No products in the cart.
துடுப்பாட்ட மட்டையை பறக்கவிட்டு ஆட்டமிழந்த ரிஷப் பண்ட்!
ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
போட்டியில் முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து 236 ஓட்டங்களை குவித்தது. பிரப்சிம்ரன் சிங் 91, ஷ்ரேயாஸ் அய்யர் 45, ஷஷாங் சிங் 33, ஜோஷ் இங்லிஸ் 30 ஓட்டங்களை அபெற்றனர்.
இதையடுத்து, 237 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் நிறைவில் 199 ஓட்டங்களை பெற்ற நிலையில், 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.
தொடர்ந்து போர்ம் அவுட்டில் தவித்து வரும் லக்னோ அணியின் தலைவர் ரிஷப் பண்ட், இப்போட்டியிலும் 18 ஓட்டங்களில் ஆட்டழந்து வெளியேறினார். குறிப்பாக ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த விதம் பேசுபொருளாகியுள்ளது.
அஸ்மத்துல்லா உமர்சாய் ஓவரில் இறங்கி வந்து அடிக்க முயன்ற பண்டின் துடுப்பாட்ட மட்டை அவர் கையை விட்டு நழுவி ஸ்கொயர் லெக் சைடில் பறந்தது. அதே சமயம் பேட்டில் பட்டு இடது பக்கம் பறந்த பந்தை ஷஷாங்க் சிங் பிடியெடுத்தார்.
இதனையடுத்து, கடந்த சீசன்களில் பந்தை பறக்கவிட்டு பண்ட் இப்போது பேட்டை பறக்கவிட்டு அவுட்டாகி வருகிறார் என்று நெட்டிசன்கள் அவரை இணையத்தில் கிண்டலடித்து வருகின்றனர்.
நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக விலைக்கு (27 கோடி ரூபாய் ) ஏலம் போன வீரர் ரிஷப் பண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.