No products in the cart.
கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்யப்பட்ட தம்பதியினர்
மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்குளம் பகுதியில், தம்பதியினர் கூர்மையான ஆயுதத்தால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். பனிச்சங்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த தம்பதியினர், நேற்று (24) அதிகாலை கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளது. இதனை அடுத்த காயமடைந்த இருவரும் மங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் 68 வயதுடைய பெண் ஒருவரும் 70 வயதுடைய ஆண் ஒருவரும் ஆவர். கொலைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை, சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














