இலங்கை

புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரியை நீக்க எதி

புத்தகங்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள VAT வரியை எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் மாற்றுவதற்கு அதிகபட்ச முயற்சி எடுக்கப்படும் என்றும், அது குறித்து சாதகமான நம்பிக்கையைக் கொண்டிருக்க முடியும் என்றும் ஜனாதிபதி கூறியதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் 27ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை இன்று (25) காலை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே, பிரதமர் இதனைத் தெரிவித்தார். “எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் புத்தகங்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள VAT வரியை மாற்றுவதற்கு அதிகபட்ச முயற்சி எடுப்பதாகவும், அது சாத்தியமாகும் என்றும் ஜனாதிபதி பேசும்போது கூறினார். அந்த நம்பிக்கையைக் கொடுக்குமாறு அவர் தம்மை வலியுறுத்தியதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்தக் கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப (BMICH) வளாகத்தில் கோலாகலமாக இன்று ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…