இலங்கை

பத்தேகம துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய மேலும் ஒருவர்

பத்தேகம, ஹல்பாதோட்ட பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவர்கள் மீது காரில் பிரவேசித்த குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய, குறித்த குற்றச்செயலுக்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்த சந்தேகநபர் நேற்று (29) இரவு ஹல்பாதோட்ட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடம் இருந்த 06 கிராம் மற்றும் 100 மில்லிகிராம் ஹெரோயினும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 23 வயதுடைய குறித்த சந்தேகநபர் கஹவத்த பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், அவர் பத்தேகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…