No products in the cart.
2025/2026 ஆண்டின் வரி செலுத்துவதற்கான இறுதி திகதி இன்றுடன்
2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்குரிய இறுதி வருமான வரிச் செலுத்தலை இன்றுடன் (30) நிறைவு செய்யுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரி செலுத்துவோருக்கு அறிவித்துள்ளது. நிறுவனங்கள், தனிநபர் மற்றும் கூட்டாண்மை வியாபார வருமான வரி செலுத்தும் அனைத்து வரி செலுத்துவோரும் கொடுப்பனவு காலப்பகுதி குறியீடாக (Payment Period Code) 25260 ஐப் பயன்படுத்த வேண்டும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது















