இலங்கை

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் கைது

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பூஜ்ஜிய கலகொடஅத்தே ஞானசார தேரர், தினியாவல பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணைக்கு அமைவாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின்கீழ் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் பூஜ்ஜிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் அண்மையில் இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…