இலங்கை

மன்னார் பொது வைத்தியசாலையில் முதன்முறையாக மூளைச்சாவடைந்தவரின் உறுப்புகள் தானம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதநேய நிகழ்வாக, முதன்முறையாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. தமது உயிரிழப்பிற்குப் பின்னரும் மற்றவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் என்ற உயர்ந்த மனிதநேய எண்ணத்துடன், நோயாளியின் குடும்பத்தினர் இந்த உறுப்பு தானத்திற்குச் சம்மதம் தெரிவித்தனர். இந்த மகத்தான முடிவு, பல உயிர்களுக்குப் புதிய நம்பிக்கையையும் வாழ்வதற்கான வாய்ப்பையும் வழங்கக்கூடியதாக அமைந்துள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆஷாத் எம். கனீபா தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…