No products in the cart.
ஜிபூட்டியில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து 109 பேர்
ஆபிரிக்க நாடான ஜிபூட்டி கடற்கரைப் பகுதியில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 சிறுவர்கள் உட்பட 109 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 116-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு (IOM) தகவல் தெரிவித்துள்ளது.ஜிபூட்டியில் இருந்து ஏமன் நாட்டை நோக்கிப் புறப்பட்ட இந்தப் படகு, ஓபோக் நகரின் குஹேரே பகுதி அருகே கடலில் சென்றபோது கவிழ்ந்து மூழ்கியது.இதில் படகில் பயணித்த எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் நீந்தி உயிர் தப்பிய நிலையில், அவர்களில் 64 பேருக்கு ஓபோக் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.















