No products in the cart.
தனியாருடனான எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி
தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இப்பாகமுவ பகுதியில் இன்று (11) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்குப் போர் தொடங்குவதற்கு முன்னர் உலக சந்தையில் டீசல் பீப்பாய் ஒன்றின் விலை குறைவாக இருந்த நிலையில், போர் காரணமாக தற்போது டீசல் மற்றும் பெற்றோல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் ஏப்ரல் மாதத்திலிருந்து ஒவ்வொரு டீசல் லீட்டருக்கும் 100 ரூபா வீதம் மானியத்தை வழங்கியதாகவும், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கும் லீட்டருக்கு 70 ரூபா வீதம் மானியம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை இலாபகரமான நிறுவனமாக மாற்றியுள்ளோம்.
கடந்த காலங்களைப் போலன்றி மிகக் குறைந்தளவு ஊழியர்களுக்கே நியமனம் வழங்கினோம்.














