இலங்கை

கொக்கேய்னுடன் கைதான 4 ஜமைக்காவாசிகள் தடுப்புக் காவலில் விசாரணை

கொழும்பு – கொள்ளுப்பிட்டிப் பகுதியில் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட ஜமைக்கா நாட்டவர்கள் நால்வரையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (13) அனுமதி வழங்கியுள்ளது.நேற்று (12) கொள்ளுப்பிட்டிப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றிலும் சிறப்பங்காடி வளாகம் ஒன்றிலும் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் நடத்திய தீவிர சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 48 வயதுடைய இரு ஆண்களும், 43 மற்றும் 52 வயதுடைய இரு பெண்களும் ஆவர்.சந்தேகநபர்கள் நால்வரும் இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…