இலங்கை

நாமலுக்கு ஏன் பிணை மறுக்கப்பட்டது

சர்ச்சைக்குரிய எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கலில் 1.4 மில்லியன் யூரோவுக்கும் அதிகமான தொகையை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக வழக்கிற்காக நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமை பெயரிடுமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.இந்த வழக்கு இன்று (13) கொழும்பு பிரதம நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார இதனை நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை நீதவான் மீண்டும் நிராகரித்ததோடு, அவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…