No products in the cart.
இலங்கையில் இருந்து இலத்திரனியல் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய ஜப்பான் எதிர்பார்ப்பு!
இலங்கையிலிருந்து இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் வெளியுறவு வர்த்தக ஒழுங்கமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி ஹிரோகி ஓய் இதனைத் தெரிவித்துள்ளார். ஜப்பானுக்குத் தேவையான இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் உற்பத்தி பொருட்களுக்கான அதிக வாய்ப்புள்ள நாடாக இலங்கை பார்க்கப்படுகிறது.
ஜப்பானின் தொழில்முறையுடன் இலங்கையின் தொழில்முறையும் ஒத்துச் செல்வதாக அமைகிறது. அத்துடன் இலங்கையில் உற்பத்திச் செலவுகளும் குறைவாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.