இலங்கை

இவ்வருடத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 975 பேர் பலி!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 975 பேர் உயிரிழந்ததாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

வாகனத்தை செலுத்தும் போது சாரதிகளுக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தினாலேயே அதிக விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

வாகனங்களை செலுத்தும் போது நித்திரை ஏற்படும் சந்தர்ப்பங்களில் வாகனத்தை சுமார் 20 நிமிடம் நிறுத்தி, ஓய்வெடுத்ததன் பின்னர் மீண்டும் பயணிக்குமாறும் அவர் வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல் தூர பகுதிகளுக்கு பயணிக்கும் போது குறைந்தபட்சம், ஒன்று அல்லது இரண்டு மணித்தியாலங்களுக்கு ஓய்வெடுக்குமாறும் இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் சுரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…