உலகம்

பிரிட்டனில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; கடலில் விடப்பட்ட மிதக்கும் விளக்குகள்

பிரிட்டனின் சவுத்என்டில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 16 வருடத்தினை நினைவுகூர்ந்துள்ளனர்.

நேற்று மாலை கடற்கரையோரம் கூடிய மக்கள் 16 வருடங்களிற்கு முன்னர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் அழிக்கப்பட்ட தங்கள் உறவுகளை நினைவுகூர்ந்தனர்.

நூற்றுக்கணக்கான மிதக்கும் விளக்குகள் சூபரிஈஸ்ட் கடற்கரையோரத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், தமிழ் மக்கள் மலர்தூவி தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

அதோடு முள்ளிவாய்க்கால் நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டன, இதன் பின்னர் நூற்றுக்கணக்கான மிதக்கும் விளக்குகள் கடலில் விடப்பட்டன.மேலும் நினைவேந்தல் நிகழ்வின் போது முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டதடன் நூற்றுக்கணக்கான மிதக்கும் விளக்குகள் கடலில் விடப்பட்டன.

What's your reaction?

Related Posts

சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம் டிரம்பின் அதிரடி திட்டம்

அமெரிக்க துறைமுகங்களில் சீன கப்பல்களை நிறுத்த, கட்டணம் விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருகின்றன. சீன பொருட்களுக்கு இதுவரை இருந்த 145 % வரியை 245 % ஆக…