இலங்கை

இலங்கையர் மூவர் அல்பேனியாவில் கைது

போலி ஆவணங்களுடன் அல்பேனிய எல்லையான கெப்டானா வை கடக்க முயன்ற 3 இலங்கையர்கள் அல்பேனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் இத்தாலியில் வழங்கப்பட்ட குடியிருப்பு அனுமதிப் பத்திரங்களை வைத்திருந்ததாகவும், அவை போலியானவை எனவும் சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அல்பேனிய அதிகாரிகள் 36, 51 மற்றும் 57 வயதுடைய 3 இலங்கையர்களையும் கைது செய்துள்ளனர்.வீசா மோசடி குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் பொருள் ஆதாரங்களாகக் கைப்பற்றப்பட்டன.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…