இலங்கை

சிறுவன் ஒருவன் ஆற்றில் தவறி வீழ்ந்த சடலமாக மீட்பு!

காத்தான்குடியில் ஆற்றில் தவறி விழுந்த சிறுவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி-05, ஊர் வீதியைச் சேர்ந்த குறித்த சிறுவன் காலை வேளையில் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

ஆற்றங்கரை பகுதியை நோக்கி தனியாக நடந்து சென்றுள்ள நிலையில், அங்கு நின்றகொண்டிருந்த போது தவறிய சிறுவன் நீரில் வீழ்ந்துள்ளார்.
இதற்கிடையில் சிறுவனை காணவில்லை என பெற்றோர்கள் பொது மக்களுடன் இணைந்து தேடி வந்துள்ளனர்.

இதன்போது காத்தான்குடி ஆற்றங்கரை அண்மித்த பகுதியில் காணப்பட்ட சிசிடிவி கமெராவில் சிறுவன் தனியாக நடந்து வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதனை வைத்து கொண்டு பிரதேச இளைஞர்கள் ஆற்றில் தேடல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது, சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…